மீமிசல் அருகே R.புதுப்பட்டிணத்தில் மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் குண்டு




புதுக்கோட்டை மாவட்டம்,  மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50), வடிவேல் (40). இவர்கள் 2 பேரும், நேற்று முன்தினம் நாட்டுப்படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் இருவரும் கடலில் சுமார் 6 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர். பின்னர் அவர்கள் பிடித்து வந்த மீன் மற்றும் நண்டுகளை வலையில் இருந்து எடுத்துவிட்டு பாசிகளை சுத்தம் செய்யாமல் வலையை கடற்கரையில் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றனர். ராக்கெட் குண்டு சிக்கியது இதையடுத்து நேற்று காலை மீனவர்கள் 2 பேரும், வலையில் சிக்கியிருந்த பாசிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அதில் ராக்கெட் லாஞ்சர் (குண்டு) இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் இதுகுறித்து அவர்கள் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராக்கெட் குண்டை கைப்பற்றினர். பின்னர் அதை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று வைத்துள்ளனர். ராக்கெட் குண்டு கிடைத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பு முதல் கட்ட விசாரணையில், ராணுவ பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் குண்டாக இருக்கக்கூடும். பயிற்சியின் போது அது வெடிக்காமல் கடலில் விழுந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. மீனவர் வலையில் வெடிகுண்டு சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments