சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு




தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1-ம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பயிலும் இஸ்லாமிய, கிறித்தவ, சீக்கிய, புத்த, பார்சி, மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளி படிப்பு திட்டத்திற்கு 15-ந் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments