மணமேல்குடி கோடியக்கரை நடுக்கடலில் காணப்பட்ட புள்ளி திமிங்கலம்





மணமேல்குடி கோடியக்கரை  நடுக்கடலில் புள்ளி திமிங்கலம் ஊர்ந்து சென்றது 

புதுக்கோட்டை மாவட்டம்  மணமேல்குடி கோடியக்கரை ‌கடல்பகுதியில்  மீனவர்கள் படகுகளில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடல் பகுதியில் ராட்ச திமிங்கலம் ஒன்று ஊர்ந்து செல்வதை  பார்த்தனர். இதனை வீடியோவாக  எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாக ஆகி வருகிறது என்பது குறிப்படத்தக்கது.

அழகன்குளம் கடற்கரை பகுதியிலிருந்து வந்த புள்ளி திமிங்கிலமா ??

ராமநாதபுரம் மாவட்டம், பாக் நீரிணையில் உள்ள அழகன்குளம் கடல் பகுதியில் கரையோரம் மீனவா்கள் புதன்கிழைமை மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, ராட்சத உழுவை மீன் ஒன்று மயங்கிய நிலையில் கரை ஒதுங்குவதைக் கண்டுள்ளனர்.

இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் ஒன்றிணைந்து மீனை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டு சுமாா் இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வெற்றிகரமாக கடலுக்குள் அனுப்பப்பட்டது .

கரை ஒதுங்கிய மீனை குறிப்பிட்ட நேரத்தில் மீட்டு, கடலுக்குள் அனுப்பிவைத்த மீனவா்களுக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

இது போன்ற மீன்கள் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் மட்டுமே அதிக அளவில் காணப்படும். ஆனால், நான்கு நாள்களாகத் தொடா்ந்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், பாக் நீரிணை கடல் பகுதிக்கு வந்திருக்கலாம் என மீனவா்கள் தெரிவித்தனா்.

அழகன்குளத்தில் விடப்பட்ட  திமிங்கிலம் தான் கோடியக்கரை வந்து இருக்கும் என்று பேசுப்பட்டு வருகிறது..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments