புகார் அளித்தும் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்! மின் கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கு வைத்த வாலிபர்கள்!!தகவல் தெரிவித்தும் தெருவிளக்கை சரி செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வாலிபர்கள் மின் கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே செரியலூர் இனாம் ஊராட்சியில் 7-வது வார்டு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் சீரமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் அப்பகுதி வாலிபர்கள் நேற்று இரவு தெருவிளக்கு மின் கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கு வைத்துள்ளனர். இதன் பிறகாவது தெருவிளக்குகளை சரி செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments