திருச்சிராப்பள்ளி வழியாக செல்லும் கோயம்புத்தூர் - மயிலாடுதுறை - கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் ஏழைகளின் சொகுசு ரயிலான ஜன் சதாப்தி அதிவிரைவு வண்டியில் கூடுதலாக 2 பெட்டிகள் சேர்ப்பு

கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு முன்பதிவு பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

செவ்வாய் தவிர, வாரத்தின் ஆறு நாட்கள் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. 21 பெட்டிகளுடன் பயணித்து வந்த நிலையில், கடந்த வாரம் முதல் கூடுதலாக இரண்டு முன்பதிவுபெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பதிவில் புதிய இலக்கை ஜன சதாப்தி ரயில் எட்டியுள்ளது.

முன்பதிவு இருக்கை எண்ணிக்கை, 2,108 ஆக இருந்தது. கூடுதலாக, இரண்டு பெட்டி சேர்த்து, 21 பெட்டியானதால், முன்பதிவு இருக்கை எண் ணிக்கை, 2,320 ஆக அதிகரித்துள்ளது. 

தெற்கு ரயில்வேயில் இவ்வளவு முன்பதிவு இருக்கைக்ளுடன் இயங்கும் ஒரே ரயில் ஜன் சதாப்தி மட்டும் தான்

கோயம்புத்தூர் - மயிலாடுதுறை அட்டவணை (12084)மயிலாடுதுறை கோயம்புத்தூர் அட்டவணை (12083)
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments