இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கோட்டைப்பட்டினம் பகுதி விசைப்படகு மீனவர்கள் 3 பேர் விடுதலை!கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த மாதம் 19-ந்தேதி ரதீஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரை சேர்ந்த அருள் (வயது 36), அய்யப்பன் (30), சுந்தரம் (26) ஆகிய 3 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 3 மீனவர்களையும் கைது செய்து இலங்கை அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஊர் காவல்துறை நீதிமன்றம் இனிவரும் காலங்களில் எல்லை தாண்டி மீன் பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் 3 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். மேலும் எல்லை தாண்டி மீன் பிடிக்க பயன்படுத்திய விசைப்படகு அரசுடைமையாக்கப்படும் என்று உத்தரவிட்டார். இதனால் விடுதலை செய்யப்பட்ட 3 மீனவர்களும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments