புதுக்கோட்டையில் போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 6½ பவுன் நகை அபேஸ்! மர்மநபர்களுக்கு வலைவீச்சு!!



புதுக்கோட்டை அசோக்நகர் பகுதியை சேர்ந்த கல்யாணராமனின் மனைவி பார்வதி (வயது 79). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள ராஜகணபதி கோவில் முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 2 பேர், பார்வதியிடம் தங்களை போலீஸ் எனக்கூறி அறிமுகப்படுத்தி கொண்டனர் 
மேலும் அவரிடம் நகையை அணிந்து கொண்டு பொது இடத்தில் வரவேண்டாம் எனவும், நகையை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், திருடர்கள் பறித்து விட்டு சென்றுவிடுவார்கள் எனவும் கூறியிருக்கின்றனர். மேலும் அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கழற்றி தருமாறும், அதனை பத்திரமாக வைத்து தருகிறோம் என தெரிவித்துள்ளனர். இதனை நம்பி பார்வதி தான் அணிந்திருந்த 6½ பவுன் சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் ஒரு தாளில் அதனை மடித்து கொடுப்பது போல ஒரு பொட்டலத்தை கொடுத்தனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து சென்றனர். பார்வதி அந்த பொட்டலத்தை அவிழ்த்து பார்த்த போது அதில் மண் இருந்துள்ளது. தங்கச்சங்கிலியை காணாது அதிர்ச்சியடைந்தார். 

இது குறித்து தனது வீட்டில் உள்ளவர்களிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் அவர் தெரிவித்தார். மேலும் கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் பார்வதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகையை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments