ஜெகதாப்பட்டிணம்‌ : விசைப்படகு சேதமடைந்த 5 மீனவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் ‌புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு






விசைப்படகு சேதமடைந்த 5 மீனவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சுப்ரமணியன், ராமதேவன், குமார், சக்ரவர்த்தி, கார்த்திக் ஆகிய 5 பேர் தங்களுடைய விசைப்படகு மூலம் கடலில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் 19.11.2019-ம் ஆண்டு கடலில் பலத்த காற்று வீசியதன் காரணமாக படகு சேதம் அடைந்தது. ஏற்கனவே 5 பேரும் தங்களுடைய படகுகளை ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்து இருந்த நிலையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆதாரங்களுடன் 5 பேரும் சமர்ப்பித்தனர். இதனை ஆய்வு செய்து படகிற்கு தலா ரூ.50 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக வழங்குவதாக இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர். தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் ஆனால் இழப்பீடு தொகை குறைவாக உள்ளதாக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர். அப்போது அவர்கள் அதற்கு முறையாக பதில் அளிக்கவில்லை. 

இதனை தொடர்ந்து 5 மீனவர்களும் புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்டனர். இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும், இது தவிர வழக்கு செலவு தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

இதுபோல் காப்பீடு மூலம் பாதிக்கப்பட்ட பாலிசி தாரர்களுக்கு இழப்பீடாக உடனடியாக இன்சூரன்ஸ் நிறுவனம் நுகர்வோர் பாதுகாப்பு நிதியில் ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments