ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் தருவதாக வாலிபரிடம் ரூ.82 ஆயிரம் மோசடி!திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் வசந்தவேல் (வயது 37). இவருக்கு அமேசான் ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் வலைதள பதிவு ஒன்று வந்துள்ளது.

அதனை அவர் திறந்து பார்த்துள்ளார். அப்போது வாட்ஸ்-அப் மற்றும் டெலிகிராம் வாயிலாக தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் ரூ.1,600 முதலீடு செய்தால் ரூ.600 லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி வசந்தவேலும் ஆன் லைன் மூலம் பணத்தை அனுப்பவே, அவருக்கு திரும்ப ரூ.2,200-ஆக கிடைத்துள்ளது. இதனால் வசந்தவேல் உற்சாகம் அடைந்தார்.

இந்தநிலையில் 2 நாட்கள் கழித்து அவரிடம் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் ரூ.82 ஆயிரம் செலுத்தும்படி கூறியுள்ளார். ஏற்கனவே முதலீடு செய்த பணத்துக்கு ரூ.600 லாபம் கிடைத்ததால், வசந்தவேல் ரூ.82 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு இந்த முறை கூடுதல் பணமும் கிடைக்கவில்லை. செலுத்திய பணமும் திரும்ப கிடைக்கவில்லை. அந்த மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வந்தவேல், இதுபற்றி மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.82 ஆயிரத்தை மோசடி செய்த அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments