குவைத்தில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் மர்மாக மரணம் உடலை சொந்த ஊர் கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை


குவைத்தில் இறந்த கறம்பக்குடி வாலிபர் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

புதுக்கோட்டை குவைத்திற்கு ேவலைக்காக... புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள துவாா் ஊராட்சி ஆண்டிகுளப்பன்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் மாாிமுத்து. இவரது மகன் செந்தில் குமாா் (வயது 37). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி தீபிகா என்ற மனைவியும், பிறந்து 20 நாட்கள் ஆன ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். 

செந்தில்குமாா் கடந்த 12 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள ஒரு தனியார் கம்பனியில் வேலை பாா்த்து வந்தாா். வளைகாப்பிற்கு வருவதாக கடந்த ஆண்டு ஊருக்கு வந்த செந்தில் குமாா் 7 மாதங்களுக்கு முன் மீண்டும் குவைத்திற்கு வேலைக்கு சென்றாா். கடந்த 2 மாதத்திற்கு முன்பு மனைவி தீபிகாவிடம் செந்தில்குமார் செல்போனில் பேசி உள்ளார். அப்போது அவரின் வளைகாப்பு விழாவிற்கு வருவதாக தகவல் தெரிவித்து உள்ளார். அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. குழந்தை பிறந்த தகவலை கூட தெரிவிக்க முடியாமல் அவரின் மனைவி மற்றும் பெற்றோர்கள் கலக்கத்தில் இருந்தனர். 

இந்நிலையில் நேற்று காலை குவைத்தில் உள்ள மருத்துவமனையில் செந்தில் குமாா் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உறவினா்களுக்கு போன் மூலம் தகவல் தொிவிக்கப்பட்டது. இதனை கேட்ட செந்தில்குமாா் உறவினா்கள் கதறி அழுதனா். பிறந்த குழந்தை முகத்தை கூட பார்க்காமல் செந்தில் குமாா் இறந்ததால் அவரது மனைவி கதறி துடித்தார். குடும்ப வறுமை காரணமாக கர்ப்பிணி மனைவியை பிரிந்து வெளிநாடு சென்ற வாலிபர் குழந்தை பிறந்ததை கூட அறியாமல் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடலை மீட்டு தர கோரிக்கை குவைத்தில் இறந்த செந்தில்குமாரின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரவும், அவரின் இறப்பிற்கான காரணத்தை அறியவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

மேலும் செந்தில்குமார் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர செந்தில் குமார் மனைவி தீபிகா, அவரது தந்தை, உறவினர்கள் ஆகியோர் சின்னத்துரை எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. புதுக்கோட்டை அப்துல்லா எம்.பி.யிடம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments