தேசிய ஒற்றுமை தினம்… ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒற்றுமை ஓட்டம்!!!


இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளான (அக்டோபர் 31) தேசிய ஒற்றுமை தினத்தை (National unity day) முன்னிட்டு ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.

இந்த ஒற்றுமை ஓட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார்.ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் வில்லியம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஓட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வரலாற்று ஆசிரியர் மதியழகன், உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ், பதிவறை எழுத்தர் பாலசுப்பிரமணியம், தன்னார்வலர்கள் முருகேசன், ஆவுடையார் சுற்றுலா தள பெருமாள் நடராஜன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சர்தார் வல்லபாய் படேல் உருவப்படத்தை சட்டையில் அணிந்து, ஆவுடையார்கோவில் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வலம் வந்தனர். காலை 7.30 மணியளவில் துவங்கிய ஓட்டம் 8.00 மணியளவில் நிறைவடைந்தது. 

மேலும் இன்று காலை 11.00 மணியளவில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்தப்பட்டு தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments