பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையும் பயணச்சீட்டு முன்பதிவு மையம் இயங்கும்!பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையும் பயணச்சீட்டு முன்பதிவு மையம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில்  பயணச்சீட்டு முன்பதிவு மையம் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 08.00 மணிமுதல் மதியம் 02.00 மணி வரை இயங்கியது.

ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கவில்லை. இதனால் பயணச்சீட்டு முன்பதிவு செய்யவும் (முக்கியமாக தட்கல்) முன்பதிவை ரத்து செய்யவும் பயணிகள் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது இது பயணிகளுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

மதிப்பிற்குரிய திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் அவர்கள் பட்டுக்கோட்டை இரயில் நிலையத்திற்கு ஆய்வுக்கு வந்தபோது பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் திரு என் ஜெயராமன் மற்றும் உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை யும் முன்பதிவு மையம் இயங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்று திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் அவர்கள் பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிமுதல் மதியம் 02.00 மணிவரை பயண சீட்டு முன்பதிவு மையம் இயங்க உத்தரவு  பிறப்பித்துள்ளார்கள் .

திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் அவர்களுக்கு பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.

மேலும் வருகிற 20.11.2022 முதல் பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் சரக்கு முனைய கட்டுமான பணிகள் நிறைவடைந்து  உபயோகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கள்
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கம்,
பட்டுக்கோட்டை,
தஞ்சாவூர் மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments