கிழக்கு கடற்கரை சாலையில் முன்னுதாரணமாக திகழும் கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர்! சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அடைக்க பணிகள் மும்முரம்!!



கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளை ஏற்படுத்தி வரும் கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை சொல்லில் இல்லாமல் செயலில் காட்டிவரும் கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர்.

புதுக்கோட்டை மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 7.11.2022 அன்று கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞர் மணமேல்குடியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பணி முடித்து விட்டு கோபாலப்பட்டிணம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் அம்மாப்பட்டினத்தில் மாடு குறுக்கே வந்த நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடைய சகோதரர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது தான் கோட்டைப்பட்டினம் ஊராட்சி. கடந்த 7.11.2022 அன்று நடந்த விபத்திற்கு காரணமாக இருந்த கால்நடைகள் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலைகளிலும் சுற்றி திரிகின்றது எனவே ஊராட்சி மன்றம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்றம் சார்பில் 08.11.2022 அன்று கோட்டைப்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிரம மக்கள் தங்களுடைய கால்நடைகளை வெளியில் விடாமல் தங்களுடைய பராமரிப்பில் வைத்து கொள்ள வேண்டும் என்றும் வருகிற 10.11.2022 மேல் உங்களுடைய கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிந்தால் பிடித்து பட்டியில் அடைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் மீறும் பட்சத்தில் பொது ஏலம் விடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.மேலும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து கொண்டு வந்து பட்டியில் அடைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இன்று 10.11.2022 கோட்டைப்பட்டினம் காவல் நிலையம் எதிரில் பட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. நாளை முதல் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் பட்டியில் அடைக்கப்பட உள்ளது. இதன் மூலம் கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சொல்லவில் இருந்து விடாமல் இந்த பணியை செயல்படுத்தி கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுகிறார் என்று பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதே போன்று கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கால்நடைகளை அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டால் தேவையில்லாத விபத்துகளில் இருந்து மக்கள் காப்பாற்றலாம் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
 
கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் மீமிசல் ஊராட்சி மன்றத் தலைவர் இது போன்று அறிவிப்பு வெளிப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனடியாக இந்த திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments