தெருக்களில் கழிவுநீர், சாலையில் குப்பை! வேதனையில் கோபாலப்பட்டிணம் மக்கள்!!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது கோபாலபட்டினம் கிராமம். 

இங்கு பள்ளிகள், வங்கி கள், அலுவலகங்கள், நுற்றுக்க ணக்கான குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.

சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீர் குட்டை போல தேங்கி நிற்கிறது. சாக்கடை கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் தெருக்களில் கழிவுநீர் ஓடுகிறது. பல இடங்களில் சாலையோரம் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இப்போது மழைக் காலம் என்பதால் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து தெருக்களில் ஓடுவதால் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. குப்பைகளில்

மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கழிவுநீர் செல்லாமல் தடுப்பதுடன் குப்பை களை அகற்றி கிராமத்தில் அடிப் படை வசதிகளை மேம்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments