மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி


மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
 
கார் மோதி பலி
 
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள தீயத்தூர் பகுதியை சேர்ந்தவர் அடைக்கலம். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 32). இவர் ஜெகதாப்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் நண்டு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

முத்தநேந்தல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

பிரேத பரிசோதனை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஜெகதாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ஞான சக்திவேல் (41) என்பதும், திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு செல்லும்போது விபத்து நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்த ஞான சக்திவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments