தொண்டியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்






திருவாடானை அருகே தொண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சாலையில் மாடுகளை அவிழ்த்துவிட்ட உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிந்தால் அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், தவறும் பட்சத்தில் அவைகள் ஏலம் விடப்படும் என்றும் பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் பானு ஜவஹா் அலிகான் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அறிவித்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பேரூராட்சிப் பணியாளா்கள் பிடித்து பட்டியில் அடைத்தனா். தகவலறிந்த மாட்டின் உரிமையாளா்கள் சனிக்கிழமை அபராதத் தொகையைக் கட்டி மாடுகளை மீட்டுச் சென்றனா். மீட்கப்படாத மாடுகளை இன்னும் 2 நாள்களுக்குள் மீட்கப்படவில்லை எனில் அவைகள் ஏலம் விடப்படும் என பேரூராட்சித் தலைவா் தெரிவித்தாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments