ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்!ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் பள்ளி சுவரில் வரையப்பட்ட நேருமாமா அவர்களின் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். பள்ளி மேலாண்மை குழு சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு (லட்டு) வழங்கப்பட்டது. மாலை 3.00 மணிஅளவில் கலைப்பண்பாட்டுத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் பாட்டு, கவிதை, நடனம் மற்றும் பேச்சுப் போட்டி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கடந்த ஆண்டு நாட்டுப்புற பாடல்கள் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த காளிதாஸ் அவர்கள் பள்ளிக்கு வருகைதந்து பாடல் பாடி சிறப்பித்தார். அவர்களுக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், காலாண்டு தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில தடகள போட்டியில் கலந்து கொள்ள உள்ள இரு மாணவர்களுக்கும் காலணிகளை (Shoes) ஆவுடையார்கோவில் சுற்றுலா தள நண்பர்கள் விவேக் மற்றும் ராஜாங்கம் நிதி உதவியுடன் பெருமாள் நடராஜன் மற்றும் பொன் மாணிக்கம் ஆகியோர் வழங்கினர். 

இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கவிதா முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் பள்ளி மேலாண்மைக் குழுவை சேர்ந்த கல்வியாளர் சுகுமார், வார்டு உறுப்பினர் பானுமதி, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments