கோட்டைப்பட்டிணத்தில் மீன்வள தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனை & மீன்வளத்துறை இணைந்து நடத்திய ரத்ததான முகாம்புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை சார்பாக மீன்வள தினத்தை முன்னிட்டு கோட்டைப்பட்டினம் பகுதியில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மற்றும் மீன்வளத்துறை இணைந்து சிறப்பு ரத்ததான முகாம் நடத்தினர். 

முகாமில் கட்டுமாவடி, மணமேல்குடி, புதுக்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், ஆர்.புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். 

ரத்த தானம் செய்த மீனவர்–க–ளுக்கு பாராட்டு சான்றி–தழ் வழங்கப்பட்டது. முகாமில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன், அமலாக்கத்துறை இன்ஸ்பெக்டர் முத்து, மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன், அறந்–தாங்கி அரசு மருத்துவர், செவிலியர்கள் மற்றும் விசைப்படகு, நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோார் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பாசி வளர்ப்பு குறித்து மீனவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்–றது. கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பாசி வளர்ப்போர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட மீன–வர் நலன் அலுவலர் குயிலி, பாசி எவ்–வாறு வளர்ப்–பது, அவைகளை எவ்வாறு சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை களை மீனவர்களுக்கு எடுத்துரைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments