மணமேல்குடி ஒன்றியத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு மானியம் தொடர்பான கூட்டம்!மணமேல்குடி ஒன்றியத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு மானியம் தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி  அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நேற்று மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கநிலை தலைமை ஆசிரியர்களுக்கு மணமேல்குடி கட்டுமாவடி மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய குறுவள மையங்களைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி மானியக் கூட்டம் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில்  மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன் மற்றும் இந்திராணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

 வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் முன்னிலை வகித்தார்.
பள்ளி மானியம் தொடர்பான செலவினங்களை எவ்வாறு மேற்கொள்வது பற்றியும், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை பள்ளி மானியம் மூலமாகவும் எவ்வாறு செய்து கொள்வது பற்றியும்,  மேலும் வரவு செலவு கணக்குகளை மேற்கொள்வதற்கு செலவினை விவரங்களை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு செலவினங்கள் மேற்கொள்ளும் போதும் பள்ளி மேலாண்மை குழு  தீர்மானம்  மூலம் செலவின விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

ஒன்றிய கணக்காளர் கலைச்செல்வன் ஆசிரியர்களுக்கு மிகத்தெளிவாக பள்ளி மானியத் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments