கோட்டைப்பட்டினம், மீமிசல் சுற்றுவட்டார பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்தோ அல்லது மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தாலோ புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு!!கொடிக்குளம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்தோ அல்லது மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தாலோ புகார் தெரிவிக்க கொடிக்குளம் உதவி மின் பொறியாளர் தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள கொடிக்குளம் துணை மின் நிலைய உதவி மின் பொறியாளர் பொது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன்படி கொடிக்குளம் பிரிவு அலுவலகம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் ஏதேனும் மின் கம்பங்கள் கீழே விழுந்தாலோ அல்லது மின் கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்தாலோ விபத்தினை தவிர்க்கும் விதமாக உடனடியாக இந்த 9499937845 துணை மின் நிலையத்தில் உள்ள இந்த கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தங்களின் வீடுகளில் ஏற்படக்கூடிய மின் பழுதுகளுக்கு மின் வாரிய களப்பணியாளர்களை அழைப்பதற்கு தயவு செய்து இந்த தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் கீழ மஞ்சக்குடி, ஜெகதாபட்டினம், மீமிசல், கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மின் பழுது குறித்து புகார் தெரிவிக்க
 
நா. செல்வம் FM- 94999 37834, 
S.ஆரோக்கியதாஸ் WM- 94999 37833, 
காரையடிச் செல்வன் FA- 9047618439 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

கோட்டைப்பட்டினம், அம்பலவானனேந்தல், மூவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மின் பழுது குறித்து புகார் தெரிவிக்க

T.கருப்பையா FM- 94999 37831, 
வே.பத்மராஜ் LI- 97874 99359,

பேரிடர் காலங்களிலும் விபத்தினை தடுக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என கொடிக்குளம் துணை மின் நிலைய உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தகவல்: பா.முகம்மது லாபிர், கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments