ஒன்றிய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் 2022 - 2023 ம் ஆண்டுக்கான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யும் கால அவகாசம் நவ 15 ஆகிய இன்றுடன் முடிவடைகிறது. இதனை விவசாயிகள் நலன் கருதி இம்மாத இறுதிவரை கால நீட்டிப்பு தரவேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 வட்டாரங்களிலும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெல்லுக்கு பிரிமீயம் தொகையாக ஏக்கருக்கு ரூ.488.05/ செலுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் அனைவரும் தொடர்ந்து பயிர் காப்பீடு செய்து வருகின்றனர்.
சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய நவ15 கடைசி நாள் என்பதால் 12,13ம் தேதிகளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அனைத்து பொது சேவை மையங்களும் பயிர் காப்பீடு பதிவு பணி மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு அறிவித்திருந்தார்.
ஆனால் ஐந்து நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் பல இடங்களில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டது. இதனால் பதிவுசெய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் தங்களின் விளைநிலங்களில் பயிரை பாதுகாக்க இரவும், பகலும் நேரடியாக பார்வையிட வேண்டியதாயிற்று. அதனால் அதிகமான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை.
எனவே பயிர் காப்பீடு செய்ய இம்மாத இறுதிவரை கால அவகாசம் தரவேண்டும் என விவசாயிகள் நலன் கருதி கேட்டுக்கொள்கிறோம் என மாவட்ட ஆட்சியருக்கு மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முபாரக் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.