நாகப்பட்டிணம் டு தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அதிகரிக்கும் விபத்துகள்!



நாகப்பட்டிணம் டு தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

நாகப்பட்டிணம் டு தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் தொடர் விபத்து ஏற்படுகிறது. எனவே மாடு வளர்ப்போருக்கு அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையானது மிகவும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல்லும் முக்கிய சாலையாகும்.இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் வேகமாக வருவதால் அருகில் வந்த பிறகே மாடுகள் சாலையில் இருப்பதை அறிகின்றனர்.உடனடியாக வாகனத்தை கட்டுப்படுத்த முயலும் போது கட்டுப்பாட்டை மீறி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

ஆகவே மாடுகளை முறையாக பராமரிக்க கால்நடை வளர்ப்போருக்கு அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் குறுக்கே வந்த மாடு மீது மோதி கார் மோதியதால் கார் பலத்த சேதமடைந்தது மாடு பலியானது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments