மணமேல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் குறுக்கே வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு! மற்றொருவர் படுகாயம்மணமேல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் குறுக்கே வந்த மாட்டின் மீது நேற்று இரவு இருசக்கர வாகனம் மோதியதில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சகோதரர்களில் அண்ணன் படுகாயங்களுடனும், தம்பி உயிரிழந்தார்.

கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸா தெருவைச் (அரஃபா தெரு) சேர்ந்தவர் நூர் முஹம்மது மகன் பாதுஷா மற்றும் இவருடைய தம்பி ராவுத்தர் நெய்னா முகமது. இவர்கள், மணமேல்குடியில் காய்கறி கடை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சகோதரர்கள் இருவரும் நேற்று இரவு 12 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அம்மாபட்டினம் அருகே குறுக்கே வந்த மாடு ஒன்றின் மீது, இவர்கள் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில்,  ராவுத்தர் நெய்னா முகமது அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பாதுஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments