கோபாலப்பட்டிணம், மீமிசல் பகுதியில் மிதமான மழை!



கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

புதுக்கோட்டை, உட்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் இன்று வரை இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளான மணமேல்குடி, ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல்,  ஆகிய இடங்களில் காற்றுடன் மழை பெய்கிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. தொடர் மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் மிதமான மழை
கோபாலப்பட்டிணம், மீமிசல் பகுதியில் மிதமான மழை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கோபாலப்பட்டிணத்தில் நேற்று இரவு முதல் காலை 9.00 மணி வரை மிதமான மழை பெய்தது.இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நின்றது.இந்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.










புகைப்படங்கள் உதவி: முகம்மது கனி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments