மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்!மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம் நேற்று கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு காலையில்  கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவிய போட்டிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளான மாறுவேட போட்டி, நடனம், நாடகம் போன்ற  நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிகழ்விற்கு பள்ளி தாளாளர் முகமது யூசுப் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியின் நிறைவில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments