அகமதாபாத் - திருச்சி ரயிலை ராமேசுவரம் நீட்டிக்க வேண்டுகோள்





  
அகமதாபாத் - திருச்சி வாராந்திர சிறப்பு ரயிலை, புதுக்கோட்டை வழியாக ராமேசுவரம் வரை நீட்டித்து நிரந்தர ரயிலாக வழங்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.



கடந்த மாதம் அக். 27 முதல் அகமதாபாத்- திருச்சி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் தற்போது 5 சேவைகளுக்கு மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்திலிருந்து ராமேசுவரத்துக்கு முன்மொழிவு செய்திருந்த புதிய ரயிலை சிறப்பு ரயிலாக திருச்சி வரை மட்டுமே இயக்குவது, புதுக்கோட்டையை உள்ளடக்கிய திருச்சி-மானாமதுரை ரயில் பாதைக்கு இடைப்பட்ட பகுதி மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் புதுக்கோட்டையிலிருந்து நேரடி ரயில் சேவைகள் இல்லாத அரக்கோணம், ரேணிகுண்டா (திருப்பதி), மந்த்ராலயம், புனே, கல்யாண் (மும்பை), சூரத், அகமதாபாத் போன்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த சிறப்பு ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் இந்த ரயிலை செங்கல்பட்டுக்குப் பிறகு காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா (திருப்பதி) வழியாக வாரம் இரு முறை இயக்க வேண்டும் என்றும் புதுக்கோட்டை பயணிகள் எம்.பிக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments