மல்லிப்பட்டினத்தில் சொந்த செலவில் சாலை அமைக்கும் முயற்சியில் பொதுமக்கள்.! மல்லி நியூஸ் செய்தி எதிரொலியாக மல்லிப்பட்டினத்தி சாலைகள் அமைக்கப்படும் என உறுதி அளித்த அத்தொகுதி MLAதஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் சொந்த செலவில் சாலை அமைக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர் .

தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் புதுமனைத்தெரு சின்னமனை இடையே பல மாதங்களாக சேதமடைந்து இருந்த சாலையை பொதுமக்களே சொந்த செலவில் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மல்லிப்பட்டினம் புதுமனைத்தெரு சின்னமனை இணைப்பு சாலை மிகவும் மோசமாகவும்,சாலையே இல்லாத அளவிற்கு சேதமடைந்து காணபட்டது.சிறிய மழைக்கே நீர் தேங்கும் அவல நிலை ஏற்பட்டு குளம் போல் காட்சி அளிக்கும்.இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ,மாணவியர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த பகுதிக்கு சாலை அமைத்து தரவேண்டி ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் கோரிக்கைக்களும் வைக்கப்பட்டன. ஆனால் அந்த பகுதக்கு சாலை அமைக்கப்படாமலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் அப்பகுதி மக்களே நிதி திரட்டி சேதமடைந்து மழை நீர் தேங்கி காணப்படும் சாலைகளை சொந்த செலவில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் உறுதி.!

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் புதுமனைத்தெரு சாலையைக பொதுமக்களே சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை செய்தி வெளியிட்டு இருந்தோம்.

செய்தியை சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் அவர்கள் பார்த்துவிட்டு உடனே மல்லி நியூஸ் ஆசிரியரை தொடர்பு கொண்டு எந்த பகுதி என்கிற முழு தகவலையும் பெற்றுக்கொண்டு புதுமனைத்தெரு சின்னமனை இணைப்பு சாலையையும்,வடக்கு தெரு~உமர்புலவர் தெரு இணைப்பு சாலையையும் தன்னுடைய சட்டமன்ற நிதியில் இருந்து செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.

மேலும் மல்லிப்பட்டினம் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார். தொடர்பு கொண்டு தகவல் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் அவர்களுக்கு மல்லி நியூஸ் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
நன்றி: மல்லி நீயூஸ் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments