திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் குறைப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் குறைக்கப்பட்டது.

திருச்சி ரயில்வே நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடைக் கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டது. பண்டிகை நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் குறைக்கப்பட்டது.

பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில், பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் வகையில், வழியனுப்ப வருவோரின் கூட்டத்தை கட்டுப்படுத்த நடைமேடை அனுமதி கட்டணத்தை அக். 4 ஆம் தேதி முதல் ரயில்வே நிா்வாகம் ரூ. 20 ஆக உயா்த்தியது.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் விழாக்காலத்தையொட்டி கடந்த அக். 4 முதல் வரும் 2023 ஜனவரி வரை பிளாட்பாா்ம் டிக்கெட் கட்டணம் ரூ. 20 ஆக உயா்த்தப்பட்டது. இதற்கு ரயில் உபயோகிப்பாளா்கள், நுகா்வோா் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிா்ப்புகள் கிளம்பின.

இந்த நடைமேடைக் கட்டண உயா்வு 2023 ஜனவரி 31 ஆம் தேதிவரை அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் ரூ.10 ஆக  குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளா் ஐ. செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழாக்காலத்தையொட்டி திருச்சி கோட்டத்திலுள்ள திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் தற்காலிகமாக ரூ. 20 ஆக உயா்த்தப்பட்ட பிளாட்பாா்ம் டிக்கெட் கட்டணம் தற்போது பழையபடி ரூ. 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments