கோட்டைப்பட்டிணத்தில் KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் & SDPI கட்சி கோட்டைப்பட்டினம் இணைந்தது பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி!



கோட்டைப்பட்டிணத்தில் KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் & SDPI கட்சி  இணைந்தது  பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பருவமழை காலத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாகோட்டைப்பட்டிணத்தில்  KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் மற்றும் SDPI கட்சி  இணைந்து பருவமழை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு  SDPI கட்சி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மா, பலா, புங்கை, வேப்பை, ஆலமரக்கன்று உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் SDPI கட்சி சார்பில் முகம்மது சாலிகு, முகம்மது மைதீன், செல்லத்தா முகமது காசிம், பசீர், ஊராட்சி மன்ற தலைவர் A.அக்பர் அலி, மணமேல்குடி  தெற்கு ஒன்றிய துணை செயலாளர் J. கலந்த நைனா முகம்மது, தன்னார்வலர்கள் KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் சார்பில் மறைக்காயர், லாபீர், ராஜா முகமது, செய்யது  இப்ராஹீம், ரியாஸ் கான், மறைக்காயர், ஹாரிஸ், அஜ்மீர் கான், சல்மான் கான் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments