தொண்டி அருகே காரங்காடு இயற்கை எழில் கொஞ்சும் அலையாத்தி காடுகள் சுற்றுலா தலத்தில் அடிப்படை வசதிகளில் தொய்வு:...






திருவாடானை-தொண்டி அருகே காரங்காடு சூழல் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளதால் அங்கு பயணிகளுக்கானஅடிப்படை வசதிகளை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது

தொண்டி அருகே காரங்காட்டில் இயற்கை எழில் கொஞ்சும் மாங்குரோவ் காடுகளுடன் சுற்றுலாப் பயணிகளின் மனதை கவர்வதுடன், படகு சவாரியில் பரவசம் காணும் வகையில்  காரங்காடு சுற்றுலா மையம் திகழ்கிறது. மீன், நண்டு, அரிய கடல்வாழ் உயிரினங்களை கடலுக்குள் சென்று கண்டு களிக்கலாம்

தற்போது இனபெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகளும் வரத்துவங்கியுள்ளன...இப்பறவைகள் மாங்குரோவ் காடுகளில் கூடுகள் கட்டி வாழ்கின்றன. எழில் மிகு கடல் அழகையும், மாங்ரோவ் காடுகளையும் ரசிக்கும் வகையில் உயர் காட்சி கோபுர வசதியும் உள்ளது. 20 பேர் படகு சவாரி செய்யும் வகையில் வனத்துறை சார்பில் படகுகள் உள்ளன.ஒரு நபருக்கு ரூ.200 வசூல் செய்யப்படுகிறது. இத்தொகையை நிர்வாகம் செய்யும் வகையில் காரங்காட்டில் குழு அமைக்கப்பட்டுள்ளது இதன் தலைவராக ஜென்மராகினியும், செயலாளராக வன அலுவலரும் உள்ளனர்....

இதில் கிடைக்கும் வருமானத்தில் 60 சதவீதம் வனத்துறைக்கும், 40 சதவீதம் கிராம வளர்ச்சிக்கும் ஒதுக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக காற்று, மழையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

இது குறித்து தலைவர் ஜென்மராகினி கூறுகையில், சுற்றுலா படகு சவாரியில் கிடைக்கும் வருமானத்தில்...சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறது. தற்போது சர்ச் அருகே பேவர் பிளாக்...சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது....

சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வருமானம் இல்லை. இதனால்இப்பணியை செய்வதிலும், அடிப்படை வசதிகளை செய்வதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது, என்றார்...

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments