அதிரை To பட்டுக்கோட்டை பிரதான சாலையை சீரமைத்து தர நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கணிவான வேண்டுகோள்..!

அதிரை To பட்டுக்கோட்டை பிரதான சாலையை சீரமைத்து தர நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கணிவான வேண்டுகோள்..!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் To பட்டுக்கோட்டை மெயின் ரோடு, வெள்ளைக்குளம், பிள்ளையார் கோயில் அருகில் சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் வலைவு சாலை சந்திப்பு, இந்த இடத்தில் 6 மாதத்திற்கு முன் சிறிய வாய்க்கால் பாலம் ஒன்று கட்டப்பட்டது.

இந்த சாலை சரியான முறையில் தார் சாலை இட்டு செப்பனிடப்படாமல் கிடப்பில் இருக்கிறது.

மேலும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் இந்த சாலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த இடத்தில் போடப்பட்ட வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசாமலும், சமிக்கை பலகைகள் வைக்காத காரணத்தினாலும், இதனால் நிறைய விபத்துக்களும் ஏற்பட்ட வண்ணம் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

இந்த சாலையில் தினமும் 1000 கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

எனவே சாலை மிகவும் சீரமைப்பு இல்லாத காரணத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையை சரியான முறையில் சீரமைத்து தர வேண்டியும், அந்த இடத்தில் இருக்கக்கூடிய வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசி கொடுக்க வேண்டியும், இருபுறங்களில் இருக்கும் செடி கொடிகளை அகற்றி தர வேண்டியும் பொது மக்கள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை வேண்டி சமூக ஆர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சார்பாக கனிவான வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

நன்றி : அதிரை இதழ் மீடியா 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments