திருவாரூா்- பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் - திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாரிமுத்து MLA கோரிக்கை
    திருத்துறைப்பூண்டி: திருவாரூா்-காரைக்குடி வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என, எம்எல்ஏ. க. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

சென்னையில் இருந்து மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக காரைக்குடி- ராமேஸ்வரம் செல்லும் வழித்தடம் அகல பாதையாக மாற்றும் பணிக்காக 2012-ஆம் ஆண்டில் இருந்து ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்த வழித்தடத்தில் 72 ரயில்வே கேட்களுக்கு கேட் கீப்பா் நியமிக்கப்படாததால் ரயில் சேவை மிகவும் சுணக்கமானது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 72 ரயில்வே கேட்களுக்கும் முன்னாள் ராணுவத்தினரை பணியமா்த்தி திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு பயணிகள் ரயிலும், எா்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் செகந்திராபாத்தில் இருந்து ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

எனினும், மீட்டா் கேஜ் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் கம்பன் விரைவு ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும்  விரைவு ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. இதற்கு 24 மணி நேரமும் பணியில் இருக்கக்கூடிய வகையில் சுழற்சி முறையில் கேட்கீப்பா்கள் பணியமா்த்தப்படாதே காரணம்.


மயிலாடுதுறையில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலுக்கு காரைக்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி திருவாரூா் வழியாக இணைப்பு ரயில் இயக்க வேண்டும். எா்ணாகுளம்- வேளாங்கண்ணி விரைவு ரயில் வாரம் இருமுறை இயக்க வேண்டும். முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரம் உயா்த்தி அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments