சரக்கு ஏற்றுதல் மூலம் கடந்த 8 மாதங்களில் ரெயில்வேக்கு ரூ.1 லட்சம் கோடி வருமானம்
2022-2023-ம் நிதியாண்டின் முதல் 8 மாதங்களுக்கான இந்திய ரெயில்வேயின் சரக்கு ஏற்றுதல், கடந்த ஆண்டின் இதே காலத்துக்கான வருவாயை கடந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 903.16 டன் சரக்கு ஏற்றப்பட்டு உள்ளது. இந்த ஆண்டில் நவம்பர் மாதம் வரை 978.72 டன் ஏற்றப்பட்டு இருக்கிறது. இது 8 சதவீத வளர்ச்சி ஆகும்.

சரக்கு ஏற்றுதல் வருவாயை பொறுத்தவரை கடந்த ஆண்டு ரூ.91,127 கோடி கிடைத்துள்ளது. இந்த ஆண்டு ரூ.1,05,905 கோடி கிடைத்து இருக்கிறது. இது 16 சதவீத வளர்ச்சி ஆகும்.

வாடிக்கையாளரை மையமாக கொண்ட அணுகுமுறை, வணிக மேம்பாட்டுப் பிரிவுகளின் பணி மற்றும் சுறுசுறுப்பான கொள்கை ஆகியவை இந்த சாதனையை அடைய உதவியதாக ரெயில்வே தெரிவித்து இருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments