புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 04.12.2022 அன்று எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்.
கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு; நாளை  நடக்கிறது

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் காலியாகயுள்ள 70 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப நாளை  (ஞாயிற்றுக்கிழமை) எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. மருதன்கோன்விடுதி அரசு கலைக்கல்லூரி, பிலிவலம் வி.எஸ்.கே. கல்வியியல் கல்லூரி, பழைய கந்தவர்வகோட்டை வித்யவிகாஸ் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தெட்சிணாபுரம் எம்.என்.எஸ்.கே. பொறியியல் கல்லூரி, இலுப்பூர் மதர்தெரசா வேளாண்மை கல்லூரி, பொன்னமராவதி புதுப்பட்டி அமலா அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொன் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, விராலிமலை செக்போஸ்ட் நிறுத்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோவில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குரும்பக்காடு லாரல் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வர்கள் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு அறைக்குள் காலை 9.50 மணிக்கு பின் அனுமதி கிடையாது. காலை 10.50 மணிக்கு முன் தேர்வு மையத்தைவிட்டு வெளியேற கூடாது. அனுமதி சீட்டு இல்லாமல் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். கருப்பு பால்பாய்ண்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் பால்பாய்ண்ட் பேனாவை தவிர தேர்வு அறைக்குள் வேறு எந்த பொருளையும் கொண்டு வரக்கூடாது என கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments