புயல் எச்சரிக்கையை முன்னிட்டு தயார் நிலையில் தீயணைப்பு துறையினர்
மாண்டஸ் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு கனமழையை எதிர்கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 தீயணைப்பு நிலையங்களில் அனைத்து சிறப்பு உபகரணங்கள் மற்றும் கருவிகள் தயார் நிலையில் உள்ளது. ரப்பர் போட் மற்றும் மிதவைகள், பவர் ஷா, பம்புகள், அவசரகால விளக்குகள், ஹட்ராலிக் கட்டர், லைப்போட், லைப் ஜாக்கெட், நீட்டிப்பு ஏணி, கயிறு ஏணி, மணிலா கயிறு அனைத்தும் இயக்கி சரிவர நிலையில் உள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களுக்கும் அவசர சூழ்நிலை தவிர எவருக்கும் விடுப்பு அளிக்கவில்லை என்று மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்ரியா தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments