மும்பை (கல்யான்) புனே சென்னை எழும்பூர் வழியாக அகமதாபாத்-திருச்சி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் - மேற்கு ரயில்வே அறிவிப்பு





மும்பை (கல்யான்) புனே சென்னை எழும்பூர் வழியாக அகமதாபாத்-திருச்சி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் - மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குஜராத் மாநிலம் ஆம தாபாத் மற்றும் திருச்சி இடையே 09419வண்டி எண் கொண்ட சிறப்பு ரெயில் வருகிற 22-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது. 

இது பற்றி மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “சிறப்பு ரெயில் வருகிற 22-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 26-ந்தேதி வரை ஆமதாபாதில் இருந்து திருச்சி வரையில் வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் ஆமதாபாதில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு வசாய் ரோடு ரெயில் நிலை யத்திற்கு மாலை 4.05 மணி அளவிலும், கல்யாணில் 4.52 மணி அளவில் வந்து சேரும். பின்னர் சென்னை எழும்பூர் வழியாக திருச்சி ரெயில் நிலையத்திற்கு சனிக்கிழமை அதிகாலை 3.45 மணி அளவில் போய் சேரும்.

இதேபோல மறுமார்க்கமாக 09420 எண் கொண்ட திருச்சி -ஆமதாபாத் ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 29-ந்தேதி வரை ஞாயிறு தோறும் அதிகாலை 5.45 மணி அளவில் புறப்பட்டு சென்னை எழும்பூர், கல்யாண், வசாய், வழியாக ஆமதாபாதுக்கு திங்கட்கிழமை இரவு 9.15 மணி அளவில் போய் சேரும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு பின்னர் வெளியாக உள்ளது.
 
இந்த ரெயிலை கோடை விடு முறையிலும் தொடர்ந்து இயக்க மேற்கு ரெயில்வே மும்பை பொதுமேலாளாருக்கு கோரிக்கை மனு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments