பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறந்தாங்கி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் பேரணி




அறந்தாங்கி அருகே துரையரசபுரம் கூட்டுறவு நூற்பாலை கடந்த 1980-ம் ஆண்டு தலித் மக்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிசெய்யும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. இங்கு 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தநிலையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 300-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறந்தாங்கி சோதனைச்சாவடியில் இருந்து நூற்பாலை தொழிலாளர்கள் பேரணியாக வந்து அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியை கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments