புதுக்கோட்டை மாவட்டத்தில் தானியங்கி மழைமானிகள் விரைவில் அமைகிறது






மழை பெய்வதை அளவிடும் கருவி தான் மழைமானி. இதில் பதிவாகும் மழைநீரை பொறுத்து மழையளவு வெளியிடப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை மழையளவு கணக்கிடும் கருவியானது ஒவ்வொரு தாலுகாவிலும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இதனை கணக்கிட்டு மழையளவு வெளியிடப்படும். இந்த நிலையில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புதிதாக தானியங்கி மழைமானிகள், தானியங்கி வானிலை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது:-

தானியங்கி மழைமானிகள் என்பது மழையளவு பதிவாவது நேரடியாக கணினியில் பதிவேறும் வகையில் மென்பொருள் மூலம் உருவாக்கப்படுவதாகும். இதில் நேரடியாக சென்று மழை அளவை கணக்கிட வேண்டியதில்லை. மழைமானிகள் வைக்கப்படும் இடத்தில் இருந்து மழையின் அளவை தானாக தெரிந்து கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

காற்றின் வேகம்

இதேபோல் தானியங்கி வானிலை மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இதில் காற்றின் வேகத்தை அறியும் வகையில் நவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக இடம் தேர்வு செய்யப்படுகிறது. ஏற்கனவே மழைமானிகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே இதனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கந்தர்வகோட்டையில் மட்டும் புதியதாக அமைக்கப்பட உள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிதாக தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments