கோவில் குளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்; போலீசார் விசாரணை
அறந்தாங்கி வடகரை முருகன் கோவில் குளத்தில் நேற்று ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அறந்தாங்கி செந்தமிழ் நகரை சேர்ந்த சந்திரசேகர் மகன் முகேஷ் ஸ்ரீராம் (வயது 22) என்பதும், திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments