ஆவுடையார்கோவிலில் மாபெரும் இலவச தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்!
 (16-12-2022) வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம், திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு மற்றும் அறந்தாங்கி பெரியநாயகி சண்முகம் தோல் நோய் மற்றும் லேசர் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச தோல் நோய் மருத்துவ முகாமிலே 300க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலை உயர்ந்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

அரிமளம் வட்டார மருத்துவ அலுவலர் நம்ம ஊரு மருத்துவர் Dr.பழனிவேல்ராஜா அவர்கள் மற்றும்  பாரத நேசன் பாண்டிபத்திரம் திரு.கணேசன் அவர்கள் குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். தோல் நோய் மற்றும் லேசர் மருத்துவர் மக்கள் மருத்துவர் அறந்தாங்கியைச் சேர்ந்த Dr.தெட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு இலவச சிகிச்சை அளித்தார்.

அறந்தாங்கி தி  ஃபோர்ட்  சிட்டி ரோட்டரி கிளப்  2018-19  தலைவர் திரு.விகாஸ் சரவணன், செயலாளர் திரு.கணேசன், பொருளாளர் திரு. கண்ணன், முன்னாள் தலைவர்கள் திரு.கபார்கான், திரு.முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சார்பிலும், ஆவுடையார்கோவில் சுற்றுலா தலம் திரு.பெருமாள் நடராஜன், திரு.முருகானந்தம், திரு.மாதேஸ்  ஆகியோர் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு-அறந்தாங்கி சார்பிலும், திரு.ஜஹாங்கீர், திரு.விஜய் ஆகியோர் பெரியநாயகி சண்முகம் மருத்துவமனை சார்பாகவும் முகாம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

நன்றி : ஆவுடையார் கோவில் சுற்றுலாதலம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments