கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் 23-ந் தேதி முதல் இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி
புதுக்கோட்டையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள்
23-ந் தேதி முதல் இயக்கம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் இருந்து வேளாங்கண்ணிக்கு வருகிற 23-ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வருகிற 24-ந் தேதி நள்ளிரவு ஏசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கிறிஸ்தவர்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் அன்றைய தினம் வேளாங்கண்ணிக்கு பொதுமக்கள் அதிகம் செல்வது உண்டு.

இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்படும். அதன்படி புதுக்கோட்டையில் இருந்து வேளாங்கண்ணிக்கு அரசு சிறப்பு பஸ்கள் வருகிற 23-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதேபோல் அங்கிருந்து திரும்பி வர புதுக்கோட்டைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வருகிற 27-ந் தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் 10 எண்ணிக்கையில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேல்மருவத்தூர்

இதேபோல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு அடுத்த வாரத்தில் பக்தர்கள் அதிகம் செல்வது உண்டு. அதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்படுவதால் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments