அமீரகத்தில் இருந்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட தனவேல் பத்திரமாக தாயகம் திரும்பினார்: -‌ உதவிய தமிழ் அமைப்புகள்




அமீரகத்தில் இருந்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட தனவேல் பத்திரமாக தாயகம் திரும்பினார்:

துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஊருக்கு செல்ல முடியாமல் அழுது கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட தனவேல் என்ற இளைஞரை துபாய் ஈமான் சார்பில் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் மற்றும் ஒருங்கிணைப்பாளர் Kausar Baig ஆகியோர் சந்தித்து குறைகளை கேட்டறிந்து பின்னர் அவர்களின் உரிமையாளரை சந்தித்து பேசி அவர் ஊருக்கு செல்ல வேண்டிய ஏற்பாடுகள் இரு தினங்களுக்கு முன் செய்யப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் துபாய் ஈமான் சார்பாக நிர்வாகி அஸ்கர் மற்றும் ஹாஜி ஆகியோர்கள் அவரை சார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர்.

பதிவு : 18/12/2022

அமீரக நேரம்: 11:45 AM

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments