திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி ரயில் பாதையில் பயணச்சீட்டு விற்பனை முகவராக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவிப்பு
திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி ரயில் பாதையில் பயணச்சீட்டு விற்பனை முகவராக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவிப்பு

திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி மார்க்கத்தில் பயணச்சீட்டு விற்பனை முகவராக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தின் திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி ரயில்பாதையில் அமைந்துள்ள 

* கரியாபட்டிணம்
* குருவப்புலம்
* நெய்விளக்கு
* தோப்புதுறை
* வேதாரண்யம் 

ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு விற்பனை முகவராக ( TRAIN HALT AGENTS) பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஒப்பந்த காலம் : ஐந்து ஆண்டுகள்.

குறைந்த பட்ச கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

பிரதான நிலையத்தில் இருந்து பயணச்சீட்டுகளை பெற்று குறிப்பிடப்பட்ட ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments