மணமேல்குடி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு குறித்த பயிற்சி
மணமேல்குடி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு குறித்த பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு மணிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட  ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சியினை வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திரு செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது.

 இப்பயிற்சியில் மணமேல்குடி  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு வீரப்பன் திரு. அரசமணி மற்றும் வட்டார கல்வி அலுவலர் திருமதி இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இப்ப பயிற்சியில்  அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கு துணை நிற்கவும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படியும், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு தற்போது பெற்றோர்களின் பங்கேற்பை 100% உறுதி செய்திட அனைத்து அரசு தொடக்க நிலை நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

 மணமேல்குடி வட்டார  வள மையத்தில் நடைபெற்ற  இப்பயிற்சியில் பேசிய வட்டார கல்வி அலுவலர் அவர்கள் மாணவர் சேர்க்கை, இடைநிற்றலை தவிர்த்தல், கற்றல் மேம்பாடு, பள்ளி மேலாண்மைக் குழு கிராம சபைகள் மூலம் குழந்தைகளின் கல்வி உரிமைகள் உறுதி செய்தல்  பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கமாகும். 

 ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்த குழுவில் பிரதான பொறுப்பினை ஏற்று பள்ளிகளில் சுகாதாரத் துறை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், கழிப்பறைகளை அமைத்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு பயன்படுத்துதல், கல்வி உதவித்தொகை, சீருடைகள் மற்றும் பாடநூல்கள் பெற்றுத் தருதல் உள்ளிட்ட பல்வேறு கல்வித் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இப்பயிற்சியினை கருத்தாளர்களாக பரிசுத்தம் கோகுலகிருஷ்ணன் மாவட்ட பயிற்றுநர் முகமதுசேக் மற்றும் முத்துக்குமார் மற்றும்    ஆகியோர் செயல்பட்டனர்.  இப்பயிற்சியில் 28 பஞ்சாயத்தில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்  அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள்  முத்துராமன் வேலுச்சாமி மற்றும் அங்கையர்கண்ணி ஆகியோர் கலந்து கொண்டனர். 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments