மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து - R.புதுப்பட்டினத்தை சோ்ந்த 2 இளைஞர்கள் உயிரிழப்பு
மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் R.புதுப்பட்டினத்தை சோ்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே பொன்னமங்கலம் கிழக்கு கடற்கரை சாலையில்  நேற்று இரவு 2.30 அளவில்  கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தின் வரப்பில் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் R.புதுப்பட்டினத்தை சோ்ந்த தினகரன், லெட்சுமணன் என்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீமிசல் காவல் துறையினா் இருவர் உடலையும் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து அதிகம் ஏற்படுவதால் பொதுமக்கள் இடையே கவலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments