இந்தியாவின் இருமல் சிரப் குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழப்பு - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட உஸ்பெகிஸ்தான்






இந்த குழந்தைகளுக்கு 2 முதல் 7 நாட்கள் வரை, டாக்-1 மேஸ்க் இருமல் மருந்து அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்தை அருந்திய 18 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. மரியான் பயோடெக் என்ற மருந்து நிறுவனம், டாக்-1 மேக்ஸ் (Doc-1 Max) என்ற இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. உஸ்பெகிஸ்தானில் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக 21 குழந்தைகள் டாக்-1 மேஸ்க் இருமல் மருந்தை அருந்தியதாக கூறப்படுகிறது. இதில், 18 குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவரின் பரிந்துரை இன்றி அளவுக்கு அதிகமாக இருமல் மருந்தை சிறுவர்களுக்கு கொடுத்ததே, உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது. அத்துடன், எத்திலீன் கிளைக்கால் என்ற ரசாயனம், டாக்-1 மேஸ்க் இருமல் மருந்தில் கலந்திருப்பதாகவும், இதுவும் குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, உஸ்பெகிஸ்தானில் மரியான் பயோடெக் நிறுவனத்தின், டாக்-1 மேக்ஸ் (Doc-1 Max) இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments