மீமிசலில் போதை பொருளுக்கு அடிமை ஆகாதீர் என்று வருவாய் துறை மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி




மீமிசலில் போதை பொருளுக்கு அடிமை ஆகாதீர் என்று வருவாய் துறை மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

மதுவுக்கு அடிமையாகாதீர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்லாதீர்கள்  போதை பொருளுக்கு அடிமை ஆகாதீர் என்று வருவாய் துறை மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் தாலுகா,மீமிசல் சரகம் மீமிசல் பேருந்து நி‌லையத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதா ராமு அவர்களின் அறிவுறுத்தலின்படி அறந்தாங்கி கோட்டாட்சியர் திரு எஸ் சொர்ண ராஜ் அவர்களின் பரிந்துரையின்படியும் அறந்தாங்கி  கோட்ட கலால் அலுவலர் திருமதி .  இ.பரணி அவர்களின் பரிந்துரையின்படியும் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் திரு வில்லியம் மோசஸ் அவர்களின்பரிந்துரையின்படியும்   மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது மற்றும் போதை பொருளுக்கு அடிமை அடிமை ஆகக்கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது  தொடர்பாக புதுக்கோட்டை மலர் கலைக்குழு  மூலமாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வருவாய்த் துறையினரால் நடத்தப்பட்டது இதில் மீமிசல் வருவாய் ஆய்வாளர் திருமதி.ஆர் விஜயா,மீமிசல் கிராம நிர்வாக அலுவலர் பிரபு, மீமிசல் சரக கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம  உதவியாளர்கள் கலந்து கொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments