மனமேல்குடியில் மீன்வள மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்
புதுக்கோட்டை மாவட்டம் மனமேல்குடியில் மீன்வளம் மற்றும் மீன்வள நலத்துறை அலுவலகம் வார்டு என்.ஜி.ஓ. சார்பாக பிரதம மந்திரி விழிப்புணர்வு மேம்பாட்டு முகாம் நடைபெற்றது. முகாமில் மீன்வளம் சார்ந்த திட்டங்கள் குறித்து சின்ன குப்பன் விளக்கி பேசினார். பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு துறை சார்பாக குயிலி கலந்து கொண்டு மீனவ மகளிர்க்கான நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். முகாமில் மணமேல்குடி, காரக்கோட்டை, கிருஷ்ணாஜிபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மகளிர் திட்ட வட்டார மேலாளர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments