முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு முன்பதிவு செய்யலாம்




முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து போன்ற போட்டிகள் நடத்தப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைபந்து, இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து, மேசைப்பந்து போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (www.sdat.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 




நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments