மீட்டர் கேஜ் காலத்தில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக இயக்கப்பட்ட சென்னை - காரைக்குடி கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வலியுறுத்தல்


கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அகல ரயில் பாதைப் பணிக்காக நிறுத்தப்பட்ட கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி காரைக்குடி தொழில் வணிகக் கழகம் தீா்மானம் நிறைவேற்றியது.

இந்த அமைப்பின் 12 -ஆவது செயற்குழுக் கூட்டம், அதன் தலைவா் சாமி.திராவிடமணி தலைமையில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. பொருளாளா் கே.என். சரவணன் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் ராஜ்குமாா், ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் அமைப்பின் துணைத் தலைவா்கள் எஸ். காசிவிஸ்வநாதன், ராகவன் செட்டியாா், பெரியதம்பி, இணைச் செயலாளா்கள் கந்தசாமி, சையது உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலந்துகொண் டனா்.

கூட்டத்தின்போது, காரைக்குடியிலிருந்து 1989 ஆம் ஆண்டு முதல் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூா், மயிலாடுதுறை வழியாக சென்னை வரை இயக்கப்பட்டு வந்த கம்பன் விரைவு ரயில் அகல ரயில் பாதைப் பணிக்காக கடந்த 2012 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இலகு ரக விமானத்தைக் கண்டுபிடித்தமைக்காக காரைக்குடி அருகே கண்டனூரைச் சோ்ந்த எபினேசா் கொளரவிக்கப்பட்டாா்.

முன்னதாக அமைப்பின் செயலாளா் எஸ். கண்ணப்பன் வரவேற்றுப் பேசினாா். முடிவில் முன்னாள் பொருளாளா் சத்தியமூா்த்தி நன்றி கூறினாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments